பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மன்றத்து இயக்குநரும், பன் நூல் ஆசிரியாரும், சீறா இலக்கியத் தெளிவுரையாளரு மாகிய உயர்திரு. சிலம்பொலி சு. செல்லப்பன், எம்.ஏ., பி.டி., பி.எல். அவர்களின் துய்ப்புரை கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் நபிகள் நாயகத்தின்" அருமை பெருமைகளை இனிய எண்சீர் விருத்தப் பாக்களில் இந்நூலில் விளக்கியுள்ளார்கள். நூலின் தொடக்கத்தில் அகிலத்தைப் படைத்தளிக்கும் அல்லாஹ் வாழ்த்தப் படுகிறான். அடுத்து, அவன் நாயகமவர்களுக்கு அருளிய திருமறை போற்றப்படுகிறது. பின்னர், நாயகம் பிறந்த நன்னகராம் மக்காவும், அங்குள்ள இறை இல்லமாம். கஃபாவும் முறையே பெருமைப்படுத்தப்படுகின்றன. அடுத்து, நபிகள் நாயகத்தின் முன்னோரைப் போற்றும் வகையில் அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப், தந்தை அப்துல்லா, தாய் ஆமினா ஆகியோரின் அருங் குணங்கள் உரைக்கப்படுகின்றன. அவர்களையடுத்து, பெருமானாருடன் இணைந்து வாழ்ந்து அவர் செயல்களுக் கெல்லாம் ஊக்கமூட்டி வந்த அவரது வாழ்க்கைத் துணைவியராம் கதீஜாப் பிராட்டியாரும் ஆயிஷா நாச்சி யாரும் வாழ்த்தப்படுகின்றனர். இவ்வாறாக இறைவனை யும் திருமறையையும் வாழ்த்தி, காப்பிய நாயகரின் முன்னோரை மொழிந்து, இணைந்து வாழ்ந்தவர்களைச் சுட்டி நூலைத் தொடங்கியிருக்கும் பாங்கு மிகவும் சிறப் பாக உள்ளது. "வல்லவனின் தூதர், வையம் காத்த வள்ளல், வெள்ளை மன வேந்து, ஞானிகளின் ஞானி, அண்டர் புகழ் நாயகம், சாந்திமதம் தந்தவர், ஏழைகளின் தோழர், விண்புகழ வாழ்ந்தவர், நடுநின்ற நெஞ்சினர்' ஆகிய