பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மக்காநகர் வாழ்த்து

ஆதிநகர் பெரியநகர்
அழகியநன் நகரம்
அரபியர்கள் தோற்றுவாய்த்
தலமான நகரம்
சீதநபி இப்றாகீம்
கட்டுவித்த கஃபாத்
தலமுள்ள உலகுபுகழ்ச்
சீர்த்திமிகு நகரம்
ஓதரிய 'வஹி' முதலில்
ஒலித்திட்ட நகரம்
உயர்குர்ஆன் வாசகத்தில்
இடம்பெற்ற நகரம்
வேதநபி முஹம்மதுர்ர
சூலுல்லா பிறந்த
மக்காவெனும் திருநகரை
வாழ்த்திடுவாய் நெஞ்சே.

2715-3