பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முத்தலிப் வாழ்த்து

ஏகதெய்வ வணக்கமுடன்
ஏழைக்குத விடுதல்
எழிலார்ந்த ரமலானில்
ஹிராமலையிற் சென்று
வாகுடனே தனித்தியானம்
செய்திடுதல் தீய
மதுவருந்தா வாழ்க்கையினை
மேற்கொள்ளல் சிசுவை
ஈகையின்றிக் கொல்வதினைத்
தடுத்திடுதல் கஃபா
எனுந்தலத்தை ஆடையின்றிச்
சுற்றுவதை நீக்கல்
ஆகயிவை போன்ற பல
நற்கருமம் செய்த
அருங்குணத்து முத்தலிபை
வாழ்த்திடுவாய் நெஞ்சே.