பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நபியே எங்கள் நாயகமே ! (நந்நபி வாழ்த்துப் பாமாலை)

வல்லவனின் தூதரென
வந்துவையம் காத்த
வள்ளலேயெம் வள்ளலேநன்
மக்கா நகர் தந்த
சொல்லரிய நற்குணமே
அறியாமை யாண்டும்
தொலைந்துயர்வு தோன்றுதற்குத்
தன்னலம் மறந்தே
அல்லுபகல் பாடுபட்டே
அயராது மக்கள்
அனைவரரும் அன்பினையும்
கவர்ந்துநிறை வான
நல்லவரே சாந்திமதம்
தந்தவரே யிறுதி
நபியான முஹம்மதரே
வாழியரோ வாழி.