பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கொள்கைதனைப் பணத்திற்காய்ப் பதவிக்காய் விட்டுக் கோணல்வழிச் சுகவாழ்வு வாழநினைக் காமல் வெள்கிவரும் கொடுமை தனைத் திரணமதாய் எண்ணி வலிந்தேற்று உறுதியுடன் தமதுவழி நின்ற உள்க அரும் மனத்தவரே உயர்ந்தவனின் தூதே உலகினரை நல்லவராய் ஆக்கவந்த மேலோய் தள்ளரிய சாந்திமதம் தந்தவரே இறையோன் தகுநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.