பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தொண்டரினும் தொண்டரெனத் தொண்டுதினம் செய்தீர் தொல்லுலகம் வியக்கும்வணம் இறைநெறியு ரைத்தீர் தண்டெடுத்த படையதனில் தளபதியு மானீர் சண்டையினும் சமாதானம் தனைமிகஉ கந்தீர் பண்டிருந்த மேலவரும் பின்புவந்த பேரும் பாராட்டும் வகையினிலே அண்டர்புகழ் நாயகமே சாந்திமதம் கண்டீர் மக்கா நகர் தந்த அறிவொளியே முஹம்மதரே வாழியரோ வாழி.