பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உருவமிலா ஓரிறைவன் உண்டென்று நம்பல் உத்தமராம் முஹம்ம தரைத் தூதரெனக் கொள்ளல் ஒருநாளைக் கைவேளை தொழுதிடுதல் ஜக்காத் துகந்தளித்தல் நோன்பிருத்தல் வாழ்நாளில் ஹஜ்ஜை பொருளிருந்தால் நிறைவேற்றல் ஆகியயிவ் வைந்தும் பொருந்துகின்ற இஸ்லாத்தின் கடமையென வல்லோன் திருநபியாய் வந்தெமக்கு வகுத்துரைத்த நல்லோர் செழுநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.