பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வல்லவனை அவனேவல் மலக்குகளை மறையை வரவிட்ட நபிகளென்ற தூதுவரை மற்றும் சொல்லரிய மறுவுலகை யிறுதித்தீர் வுநாளைச் சொர்க்கமொடு நரகத்தை நம்புவது முஸ்லிம் நல்லபெரும் ஈமானின் கடமையெனத் தந்த நாடுபுகழ் மேலவரே வானவரும் போற்றும் எல்லையிலாக் கருணையுள ஆண்டவனின் தூதே எங்களரும் முஹம்மதரே வாழியரோ வாழி.