பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 துன்பத்தைத் தாங்கிடுதல் சுகம்குறைத்துக் கொள்ளல் துயருற்றோர்க் குதவிடுதல் சுற்றத்தார் பேணல் இன்பத்தை வெறுத்திடுதல் இல்லார்க்கு வழங்கல் இதயத்தின் கருணையினால் எளியோரைக் காத்தல் அன்புவடி வாகிடுதல் அண்டினோருக் குதவல் ஆனயிவை இஸ்லாத்தின் ஒருபகுதி என்ற சன்மார்க்கத் தூதுவரே சகம்புகழும் இறுதித் தனிநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.