பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெருஞ்செலவில் வீடுகட்டல் ஆகாத செய்கை பேசரிய கலைப்பொருளில் காசுகொட்டல் வீணாம் அருஞ்செல்வம் பொன்வெள்ளி யாகுமது கொண்டே அரசரென வாழ்ந்தாலும் பாத்திரம்செய் யாதீர் தருங்கெடுதி பெருஞ்சிரிப்பும் கடுங்கோபம் தானும் தவிர்த்திடுக இவைவாழ்வில் அருங்குணத்து நாயகமே என்றைக்கும் என்ற ஆண்டவனின் தூதே அருள்வடிவ முஹம்மதரே வாழியரோ வாழி.