பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆடைகளால் அணிமணியால் அத்தர்போன் றவையால் அலங்கரித்து முகம்மினுக்கிப் பவனிவரு வோரே தேடித்தினம் பணம்பெருக்கிச் சீமானாய் வாழும் செருக்காலே ஏழைகளை மதிக்காதி ருப்பீர் நாடியுங்கள் அழகினையோ பணப்பெருக்கந் தனையோ நல்லிறைவன் பார்ப்பதில்லை நாளுமுங்கள் செயலும் கூடுகின்ற நினைப்பையுமே நோக்குகின்றான் என்ற குணக்குன்றே முஹம்மதரே வாழியரோ வாழி.