பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கொள்ளைலாபம் கூடாது வணிகத்தில் என்றீர் குறைத்தளந்து விற்காதீர் என்றெடுத்துச் சொன்னீர் எள்ளிநகைத் திகழாதீர் எளியவரை என்றீர் யாருமற்ற ஏழைகளைக் காக்கவும்ப ணித்தீர் தள்ளியெந்த ஏழையையும் அமரும்படி சொன்னால் தண்டிப்பான் நல்லிறைவன் . அள்ளியள்ளிப் பேரின்ப என்றெடுத்து ரைத்தீர் அமுதெமக்க ளித்த ஆதிநபி முஹம்மதரே வாழியரோ வாழி