பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பிறருக்காய் உன்னுணவைக் குறைத்திடுதல் நன்று பிறருக்காய் உன்சுகத்தை விட்டிடுதல் நன்று பிறருக்காய்ப் பொருளீட்டல் நன்றினுமே நன்று பிறர்பொருளுக் காசையிலாப் பேராண்மை நன்று உறவுக்காய் ஓரவஞ்சம் பேசாமை நன்று ஒன்றுபட்ட வாழ்வுபெற தியாகம்செயல் நன்று துறவுக்கும் மேலாகும் இல்வாழ்க்கை என்ற தூயவரே முஹம்மதரே வாழியரோ வாழி.