பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வணங்கிடுதல் ஆண்டவனுக் கன்றிப்பிறர்க் கில்லை வாழுவது பிறருக்காய் தனக்குமட்டு மன்று யாரிடமும் தீமை பிணங்குவது நல்லதல்லவ பேசுவதும் செய்குவதும் எண்ணுவதும் பாவம் அணங்குகளை மதுக்கடையைச் சூதாடும் இடத்தை அணுகுவதே ஆண்டவனை மறந்தவரின் செய்கை இணங்கியிதை அறிந்திடுக எனவுரைத்த நல்லோர் இதயம்வளர் முஹம்மதரே வாழியரோ வாழி.