பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தாயாரைத் தந்தையரைப் பேணிடுதல் பெற்ற தம்மக்கள் தமைக்கல்வி தந்துயர்வாக் கிடுதல் நோயாளி தனைவினவல் நூல்கற்ற மானி நொந்திருந்தால் அவர்க்குதவி செய்வித்துக் காத்தல் தீயோரின் கூட்டுறவில் சேராதி ருத்தல் சேர்ந்திறையைத் தொழுவதையே மிகவிரும்பிக் கொள்ளல் தூய்தான நன்நெறியாம் தெரிகஇவை என்று சொன்னநபி முஹம்மதரே வாழியரோ வாழி.