பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ்.நவராஜ் செல்லையா


தனக்குத் தெரிந்த தொழிலை அவர் தேர்ந்து எடுக்கவில்லை. தன் அந்தஸ்துக்கு ஏற்ற தொழிலாகவும் பார்க்கவில்லை. பிறரை நம்பித் தொழில் ஆரம்பித்தால் பெருத்த இழப்புதான் ஏற்படும் என்ற பேருண்மையை மட்டும் அப்பொழுது புரிந்து கொண்டார்.

துன்பம் தான் தொடர்கிறது என்றாலும், அவரால் ‘சும்மா’ இருக்க முடியவில்லை. கெளரவமான தொழிலாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது மனதுக்கு சமாதானமாக இருந்தது. வருமானம் அதிகம் இல்லையென்றாலும், வாழ்வுக்கு கெளரவம் கிடைத்தது.

போட்டோ ஸ்டுடியோ தொழில் அது. அதைப் பற்றிய ‘ஆன்னா ஆவன்னா கூட அவருக்குத் தெரியாவிட்டாலும், ஓர் அசட்டுத் தைரியம். 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக்காரரை நியமித்தார். லாபம் அதிகம் இல்லாவிட்டாலும், நஷ்டம் இல்லாமல் தொழிலோ ஓடிக் கொண்டிருந்தது’.

ஒரு நாள் அந்த முதலாளி ஊரில் இல்லாத சமயம், திருமண வைபவத்திற்கு போட்டோ பிடிக்க ஒப்புக் கொண்டு போனார் அந்தத் தொழிலாளி. 20போட்டோ எடுத்ததில் ஒன்றைத் தவிர எல்லாமே பாழாய் போயிருந்தது தவறுசெய்தவன் தொழிலாளி. அதற்குரிய தண்டனையை அடைந்ததோ அந்த முதலாளி.

“இப்படி போட்டோ எடுத்து எங்கள் திருமண வைபவத்தையே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டீர்களே! இனிமேல் நாங்கள் திருமணமா செய்து கொள்ளப்