பக்கம்:நமது கோரிக்கை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சென்ற சட்டமன்றக் கூட்டத்தில் அதைக் குறிப்பிட் டிருக்கிறேன். வெகு அண்மையிலே நடைபெறவிருக்கும் நிலச் சீர்திருத்தம் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இவைகளைப் பற்றியும் நிலச் சீர்திருத்தத்தைப் பற்றியும் நாம் விவாதிக்க இருக்கிறோம். அதில் தரப்படும் அடிப்படையில் நல்ல முடிவுகளைத் தமிழ் நாட்டில் நிலச் சீர்திருத்தத்தையொட்டி எடுக்க இருக்கிறோம். கருத்துக்களின் வைகளெல்லாம் சமதர்ம சமுதாயத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடை யாளங்களே தவிர வேறு அல்ல. பெரியவர் மணலி கந்தசாமி அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல. தஞ்சை மா வட்ட விவசாயத் தொழிலாளர்களுக்குப் பல்லாண்டுக் காலமாக இருந்த பிரச்சினை அவர் களுடைய குடியிருப்பு மனைகள் அவர்களுக்குச் சொந்தமாக ஆக்கப் படாமல்இருந்ததாகும். சாயத் அதை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே அறிவித்ததற்கிணங்க அந்தக் குடி யிருப்பு மனைகளைத் தஞ்சை மாவட்டத்திலேயிருக்கும் * விவ தொழிலாளர்களுக்கு ஒப்படைக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி அதைச் செயல் படுத்திக்கொண்டு இருக்கிறோம். அதுவும் சமதர்ம சமுதாயத்தை நாக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது என்பதற் கேற்ற அறிகுறியேயாகும். 10 பேருந்துத் தடங்களுக்கு மேல் வைத்துக் கொண் டிருக்கக் கூடாது என்று வரையறுத்து அதற்கு ஓர் உச்ச வரம்பினைக் கொண்டு வந்து, டி.வி.எஸ். எஸ். ஆர். வி. எஸ்., ஏ. பி. 4. ராமன் அண்ட் ராமன் போன்ற பெரிய பஸ் நிறுவனங்களையெல்லாம் தேசிய உடைமை யாக ஆக்கியிருப்பதும் இந்த அரசு சமதர்ம சமுதா யத்தை நோக்கி விரைந்து நடைபோடுகிறது என்பதற்கான அடையாளங்களேயல்லாமல் வேறல்ல. 109-137-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/10&oldid=1705271" இலிருந்து மீள்விக்கப்பட்டது