பக்கம்:நமது கோரிக்கை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CORNDERABA பதிப்புரை 19FEB 1972 MADRAS கடந்த 22-1-1972 அன்று சட்ட மன்ற மேலவை, சட்டப் பேரவை இவைகளின் கூட்டுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் மேதகு கே.கே.ஷா அவர்கள் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்தும், திருத்தங்கள் தந்தும் பல உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும் ஆற்றிய உரைகளுக்குப் பின்னர் 31-1-1972ல் தமிழக முதல்வர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கள், காலையில் சட்டப் பேரவையில் ஒரு மணி நேரமும், மாலையில் சட்டமன்ற மேலவையில் ஒரு மணி நேரமும் ஆற்றிய பதிலுரைகளைத் தொகுத்து 'நமது கோரிக்கை' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள் ளோம். எழுப்பப்பட்ட பல வாதங்களுக்கும் உரிய பதில்கள் அடங்கியுள்ள இச்சிறு நூல் வழக்கம்போல் 'தமிழரசு' இதழின் இணைப் பாக வழங்கப்படுகிறது. சென்னை 10-2-1972 செய்தி-மக்கள் தொடர்புத் துறை தமிழ்நாடு அரசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/4&oldid=1705265" இலிருந்து மீள்விக்கப்பட்டது