பக்கம்:நமது நிலை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 என்று எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். ஆகவே, இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பின் தங்கிய மக்களுக்காக, என் உயிரைப் பணயமாக வைத்து, அவர்கள் வாழப் பாடுபடுவேன் என்று எடுத்துச் சொன்னேன். பின்தங்கியவர்கள் நிலை உயர உதவிகள் அது வாய்ச் சொல் அல்ல என்று நிரூபிக்க, உடனடியாகவே பின்தங்கி யவர் நலனு க்காக ஒரு தனி இலாகா அமைக்கப் பட்டது. தனி இலாகா, தனி அமைச்சர் அல்லாமல், ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. அந்தக் குழு தன்னுடைய பரிந்துரை களைத் தந்து, அந்தப் பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து கொண்டிருக் கும் நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அது மாத்திரமல்ல, பின் தங்கி யோர் நலத்துறையில், மாணவர்களுக்கு 50 சத விகிதம் எண்கள் பெற்றால் 40 100 தான் அவர்களுக்கு " ஸ்காலர்ஷிப் படும் என்கிற நிலையை மாற்றி, மாற்றி, 40 40 சதவிகிதம் பெற்றவர்களும் ஸ்காலர்ஷிப் பெற கொடுக்கப் எண்கள் வகை செய்தோம். ஏற்கனவே ரூ. 90 லட்சம் உதவிப் பணம் என்றிருந்ததை ரூ. 300 லட்சம் உதவிப்பணம் தரும் அளவில் திருத்தி அமைத்தோம். அதேபோல், இடைக்கால வரவு-செலவுக் கணக்கில் ரூ.9 கோடி ஒதுக்கி, பின் தங்கியவர்களுக்கு ரூ.3 கோடி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரூ. 6 கோடி என்ற விவரத்தைப் புள்ளி விவரம் காட்டுவது மட்டுமல்ல ; மக்களுடைய முன்னேற்றத்திற்காகப் பல பணிகள் செய்யப் தாழ்த்தப்பட்ட பட்டிருக்கின்றன. கிராமங்களில் இடுகாட்டுக்குக்கூடச் செல்ல முடியாத அளவில் கஷ்டங்கள் இருந்ததை, எதிர்க் கட்சியிலிருந்தபோது சுட்டிக்காட்டியவற்றை விடாமல், மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக, இன்றைக்கு மறந்து அந்தக் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டு எத்தனையோ கிராமங்களில் அரிசனக் காலனிகளுக்கு இணைப் வருகிறோம். புச் சாலைகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/52&oldid=1705367" இலிருந்து மீள்விக்கப்பட்டது