10
நமது முழக்கம்
இந்தியா—வேட்டைக்காடு
டாடாவுக்கு கிழக்கு மேற்காக 1500 மைல் அகன்று, தெற்கு வடக்காக 1600 மைல் விரிந்து இருக்கும் இந்த பரந்த இந்தியா ஒரு வேட்டைக்காடு. நாராயணன் கோவிலுக்கு நாலுபுறம் வாசல் என்றபடி இந்த இந்திய துணைக் கண்டத்தின் எந்தப் பக்கத்திலும் அவன் வியாபாரம் செய்யலாம். ஜாம்ஷெட்பூரில் இரும்பு எடுக்கலாம், கல்கத்தாவில் ஆணி செய்யலாம், அதை வேறு எங்காவது கொண்டுபோய் விற்கலாம். அவனை யாரும் தடுக்க முடியாது. இந்தியா பூராவும் அவனுக்கு வேட்டைக்காடு.
முதலாளி சரக்கை உற்பத்தி செய்கிறான். ஏராளமாக அவன் உற்பத்தி செய்யும் சரக்கை விற்கவேண்டுமல்லவா? ஆகவே அவனுக்கு மார்க்கெட் தேவையாக இருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு அவன் வியாபாரம் செய்யும் இடம் நாடு பெரியதாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு முதலாளியின் லாபம் பெருகுகிறது—பெரிய முதலாளியாகிறான். உற்பத்தியான சரக்கை விநியோகம் செய்ய பெரிய மார்க்கெட் இல்லாவிடில் பெரிய முதலாளியாக எவனும் ஆகமாட்டான். முதலாளிகள் இன்றைய உலகில் பெரிய நாடுகளில்தான் இருக்கிறார்கள்; சிறிய நாடுகளில் முதலாளிகள் இல்லை.
காட்டை குறைப்போம்
காடு பெரியதாக, மரங்கள் அடர்ந்ததாக இருந்தால், அங்கு புலி வாழும். புலி எதன்மீது வேண்டுமானா-