அண்ணாதுரை
11
லும் பாயும். காட்டிலே புலி பதுங்க ஏராளமான புதர்கள் உண்டு. புலிகளை ஒழிக்க காட்டைக் குறைக்கவேண்டும். மரங்களை வெட்டவேண்டும். வேலி கட்டி பாதுகாக்க வேண்டும். புலி மறைந்துவாழ அங்கு இடமிருக்காது. வேண்டுமானால் நாய்கள் குரைக்கலாம்; நரிகள் ஊளையிடலாம்; ஓநாய்கள் உயிர்வாழலாம். ஆனால் புலி மட்டும் வெட்டப்பட்ட காட்டில், வேலி போடப்பட்ட காட்டில் நிச்சயமாக இருக்காது. அதைப் போலத்தான் சிறிய நாடுகளில் முதலாளிகள் இருக்கமாட்டார்கள்.
சிறிய நாடுகளில் முதலாளி உண்டா?
நார்வே நாட்டிலே முதலாளிகள் இருக்கிறார்களா? இல்லை. கிரீசில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்வீடனில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்விட்சர்லாந்தில் முதலாளிகளைப் பார்க்க முடியுமா? ஸ்பெயினில் முதலாளிகள் வாழ்கிறார்களா? பாரிசில் பார்க்கமுடியுமா, முதலாளிகளை? அமெரிக்காவில் முதலாளி இருக்கிறான். அடுத்தபடி இந்தியாவில் வளர்கிறான், நான் குறிப்பிட்ட சிறிய நாடுகளில் முதலாளிகள் ஏன் இல்லை தெரியுமா? அந்த நாடுகள் இந்தியாவைப்போல் மிகப் பெரியதல்ல. அந்த நாட்டிலிருக்கும் வியாபாரி ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்கு இடையே தான் வியாபாரம் செய்யவேண்டும். எனவே அவன் பெரிய முதலாளியாவதில்லை.
ஒரே இந்தியா எப்போது?
ஆனால் இன்று இந்தியா முழுவதும் முதலாளிகளுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு இந்தியா திறந்த மார்க்கெட்டாக எப்போது ஆனது!