12
நமது முழக்கம்
வெள்ளைக்காரனின் பிக்ஸட் பைனட்டிற்குப் பிறகுதான் இந்தியா ஒன்றானது. நாட்டுக்கு நாடு இருந்த சுவர்களைச் சுக்கலாக்கிய பிறகு இந்தியா ஒன்றானது. இருந்த எல்லைக் கோடுகளையெல்லாம் அழித்துவிட்ட பிறகுதான் அது அகண்ட இந்தியாவானது. ஒவ்வொரு நாட்டு கோட்டைச் சுவர்களை இடித்து வெள்ளைக்காரன் வெற்றி பெற்ற பிறகுதான் இந்தியா ஒரே நாடாக மாறியது.
இந்தியா ஒரே நாடாக ஒரே ஆட்சியின்கீழ், ஒரே சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பிறகுதான் இங்கு முதலாளி முதலைகள் கொழுத்தன. இந்தியா பூராவிலும் தங்கு தடையின்றி சென்று சுரண்டி பெருத்து, பெரிய முதலாளிகளாகி விட்டனர். இன்று இந்த நாட்டில் முதலாளிகள் பெருகிவிட்டனர்.
முதலாளித்வத்தை ஒழிக்க....?
முதலாளித்துவத்தை ஒழிக்க பல வழிகள் இருக்கின்றன. முக்கியமாக முதலாளித்துவத்தை ஒழிக்க மூன்று வழிகள் உள்ளன. ஏன் நான்கு வழிகள் என்று கூட சொல்லலாம். நான்காவது வழி சிலருக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம்.
முதல் வழி
முதலாளித்துவம் ஒரு பலமான ஸ்தாபனம். அதை ஒழிக்க எல்லா நாடுகளும் விரும்புகின்றன. பல நாடுகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. முதலாளித்துவத்தை