அண்ணாதுரை
13
முறியடிக்க பயன்படும் சில முறைகளைத்தான், இப்போது கூறப் போகிறேன்.
முதல் வழி கையில் மெஷின் கன்னை எடுத்துக் கொண்டு போய் முதலாளிகளைச் சுட்டுவிடலாம். அது சட்ட விரோதமாயிற்றே என்று எண்ணலாம். ஆம்! சட்டவிரோதந்தான். சட்டத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
இரண்டாவது வழி
முதலாளிகள் லாபத்தால் வளர்கிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன்! முதலாளிகளின் லாபத்தைக் குறைக்க வேண்டும். முதலாளிகளுக்குக் கிடைக்கும் லாபத்தை அப்படியே அரசாங்கம் உறிஞ்சிவிட வேண்டும். முதலாளிகளுக்கு ஓரளவு லாபம்தான் கிடைக்க வழிசெய்யவேண்டும்.
முதலாளிகளுக்கு கிடைக்கும் லாபம் அவர்கள் மேனி மினுக்குக்கு பயன்படுத்தும் அளவு இருக்கக்கூடாது. அவர்களது வாழ்க்கை நடத்துவதற்கு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதைத் தவிர, மீதிப் பணத்தை வரிபோட்டு அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
அப்படி செய்தால் முதலாளிகள் பெருகவும் மாட்டார்கள். அவர்களிடம் பொருளும் குவியாது. வரி போட்டு அவர்களிடமிருந்து வாங்கும் பணத்தில் மக்களுக்கு நல்லது செய்யலாம். இதனால் முதலாளித்துவம் ஒழிந்துவிடும்; ஓங்கி வளராது.