பக்கம்:நமது முழக்கம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நமது முழக்கம்



போட்டுக் கொள்ளும் அது யானை என்ற காரணத்தால். ஆகையால் வெறும் நாரினால், வாழை மரத்தில் யானையைக் கட்டுவதில் பயனில்லை என்று கூறுகின்றோம் நாம். ‘அரசாங்கமே யானையை அடக்க வாழை மரத்தில் கட்டாதே’ என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறோம்.

ஆந்திரம் கேட்போர் சொல்வது என்ன ?

இன்று ஆந்திர மாகாணம் கேட்பவர்கள் என்ன கூறுகிறார்கள்?

எங்கள் நாட்டுத் தொழில்களை எங்களிடம் விட்டு விடுங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம். சர்க்காரையும் எங்களிடமே தந்து விடுங்கள், எங்களுக்கு வேண்டியது எங்களுக்குத் தான் தெரியும், புரியும். தெலுங்குத் தெரியாதவர்களுக்கு, அம்மொழியின் அருமை எப்படித் தெரியும். ஆகையால் எங்களால்தான் முடியும் எங்கள் மொழியை வளர்க்க, எங்கள் நாட்டு மக்களின் குறைகள், பாராளுமன்றத்திலிருக்கும் தமிழர்களுக்குத் தெரியாது! வேண்டுமானால் தமிழரின் குறைகள் தெரியலாம்! கிருஷ்ணா நதி எங்கேவிருக்கிறது என்பது தமிழர்களுக்குத் தெரியாது! கோதாவரி எங்கே பிறக்கிறது, எந்த வழியாய் செல்கிறது, எங்கே கலக்கிறது என்பது எங்களுக்குத்தான் தெரியும் தமிழர்களுக்குத் தெரியாது.

அவர்களுக்குக் காவிரிக்கரை நன்றாகத் தெரியும். வைகை நதியின் வளப்பத்தை அவர்கள் அறிவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/16&oldid=1770508" இலிருந்து மீள்விக்கப்பட்டது