பக்கம்:நமது முழக்கம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

17



எங்கள் நாட்டைப் பற்றி எங்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும். அக்கரையும் இருக்கும். ஆகவே எங்கள் நாட்டைப் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

திராவிட நாடு கேட்கிருேம்

ஆந்திரர்கள் ஆந்திர மாகாணம் கேட்கிறார்கள். நாம் திராவிட நாடு கேட்கிறோம். ஆந்திரம், தமிழகம், கேரளம், கன்னடம் ஆகியவைகள் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாட்சியைக் கோருகிறோம். இந்த நான்கு நாடுகளும் தனித்து வாழ முடியும்.

வளமான நாடு

எல்லா வளங்களையும் பெற்றிருக்கிறது இந்த நாடு. இயற்கை வளம் தேவைக்கு மேல் இருக்கிறது. மூன்று பக்கமும் அகன்ற ஆழமான கடல்கள் உள்ளன. வியாபாரத்திற்கேற்ற துறைமுகங்கள், அக்கடற்கரையோரங்களில் உள்ளன. சென்னை போன்ற நல்ல நிலையில் உள்ள துறைமுகங்கள்; தொண்டியைப் போல அழிந்த நிலையிலுள்ள துறைமுகங்கள் பல உள்ளன.

நாட்டைப் பிரித்தால்

நாட்டைப் பிரித்து விட்டால், வெளிநாட்டு முதலாளிகள் தலைகாட்ட முடியாது, திராவிடத்தில்! முதலாளிகளின் ஆதிக்கப்பிடியிலிருந்து விடுதலையடையும் திராவிடம். அந்தத் திராவிடத்தை அடைவதுதான் நமது இலட்சியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/17&oldid=1770509" இலிருந்து மீள்விக்கப்பட்டது