18
நமது முழக்கம்
ஆரியம் திராவிடத்தில் வாழாது
இந்த மே தினத்தில் திராவிடத்தைப் பெற உறுதி கொள்ளவேண்டும். அந்தத் திராவிடத்தில் முன் கூறிய வழிகளைப் பயன்படுத்தி முதலாளித்துவத்தை முறியடித்து விடலாம். இன்னொன்றும் கூறுகிறேன். திராவிட நாட்டில் ஆரியம் இருக்காது. நிச்சயமாய்க் கூறுகிறேன். அது திராவிட நாட்டில் வாழாது, வாழவிட மாட்டோம் என்றால் ஆரியர்கள் திராவிட நாட்டில் வாழ முடியாது, வாழவிட மாட்டோம் என்று பொருளல்ல.
ஆரியத்தை அழிப்போம் என்றால், அனந்தாச்சாரியை அழிப்பது என்பதல்ல பொருள். அவர்களை நாம் ஒன்றும் செய்ய மாட்டோம். உங்களுக்கு நன்றாகத் தெரியும்! பல ஆரியர்கள் சீர்திருந்தி, நமது இயக்கத்தை ஆதரித்து நம்மவர்களாக இருக்கிறார்கள்.
‘அவர்களை’யும் பிடித்தாட்டுகிறது.
ஆரியத்தை ஏன் திராவிட நாட்டில் வாழ விடமாட்டோம் என்றால், அது நம்மை வாழவிடவில்லை, இனியும் இருந்தால் வாழவிடாது. ஆரியம் நம்மை அழித்திருக்கிறது. அதன் பிடியில் சிக்கி சிதைந்தோர் ஏராளம். அது நம்மை மட்டுமா பிடித்து ஆட்டுகிறது? ஆரியர்களையும் அந்த ஆரியம் பிடித்தாட்டுகிறது? அது அவர்களுக்குப் பிரியமானதென்ற நீங்கள் கருதுகிறீர்கள்?
யார் தான் இந்தக் காலத்தில் பஞ்ச கச்சம் கட்டிக்கொள்ள விரும்புவார்கள்? ஒரு காலை எடுத்து வைத்-