பக்கம்:நமது முழக்கம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நமது முழக்கம்



சொன்னேன், செய்தேன்

அண்ணாமலை பல்கலை கழகத்தில் நான் ஒரு சமயம் சொற்பொழிவாற்ற சென்றிருந்தேன். கல்லூரியை விட்டு ஜஸ்டிஸ் கட்சியில் ஈடுபட்டிருந்த நேரம் அது. அப்போது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன் முதலியோர் மாணவர்கள்.

நான் அங்கு வருவதை எதிர்த்து சில மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். தோழர் பால தண்டாயுதமும் அன்று, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர். சில மாணவர்களின் எதிர்ப்பு எனக்கு நன்றாகத் தெரியும்.

இரண்டு நாள் சொற்பொழிவு செய்தேன். சொற்பொழிவு நேரம் தவிர மற்ற நேரத்தில் மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் என்னைப் பல கேள்விகள் கேட்டார்கள். “ஜஸ்டிஸ் கட்சி பணக்காரர்களின் ஸ்தாபனமாக மாறி விடுகிறதே, சீமான்களின் பூட்ஸ் துடைக்கும் கட்சியாக ஆகிவிடுகிறதே” என்று குறைபட்டனர்.

அவர்களிடம் சீக்கிரத்தில் அதை பாமர மக்களின் கட்சியாக, மாற்றுகிறேன் என்று சொன்னேன். சீமான்களின் பிடியில் எப்படியோ சிக்கிக்கொண்ட கட்சியை, மாளிகையிலிருந்து மண் குடிசைக்கு, மைதானத்திற்கு கொண்டுவரவே முயல்வேன் என்று சொன்னேன்.

சொன்னபடி திராவிடர் கழகமாக மாற்றி, சேலத்தில் அரசாங்கத்தார் தரும் ‘சர்’ முதலிய பட்டங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/22&oldid=1770517" இலிருந்து மீள்விக்கப்பட்டது