பக்கம்:நமது முழக்கம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

23



கழற்றி எறியவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தேன். மிட்டா மிராசுகள், கட்சியைவிட்டு ஓடினர். ஏழை மக்களின் ஸ்தாபனமாக மாறியது கட்சி!

பட்டம் பதவி பெற்றவர்களை விட்டு, விலகி மக்களின் கழகமாக மாறிவிட்டது. அதில் பெருத்த முதலாளிகள் கிடையாது.

பெரிய முதலாளி

எங்கள் கழகத்தில் இருக்கும். மிகப் பெரிய முதலாளி என்று மூர்த்தி சுருட்டு தயாரிக்கும் K. K. நீலமேகம் அவர்களைத்தான் சொல்லலாம்.

நாங்கள் பாடுபட்டு பெறும் திராவிட நாட்டை சர். ஆர். கே. சண்முகத்திடம் விட்டு விட்டால் நீங்கள் எங்களைக் குறை கூறலாம், திட்டலாம்.

இராமனின் பாணமா?

வெறும் பொதுவுடமைக் கொள்கை சாதி, பேதத்தை ஒழித்து, மதப்பிடியிலிருந்து விடுவித்து, மூடு பழக்கங்களிலீடுபட்ட மக்களை விடுதலை செய்து, நம் நாட்டை நம்மிடம் தருமா? இராமன் விட்ட கணை இராவணனின் உடல் முழுவதும் துளைத்து, சீதா, சீதா என்ற உணர்ச்சி எங்கேயாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்து, பிறகு கடலில் மூழ்கி, மீண்டும் இராமனின் அம்புறாத்தூணியில் வந்து புகுந்து கொண்டதாம். அதைப் போல இங்கிருந்து விடும் கணை விந்திய மலையைத் தொட்டு, மேலும் தொடர்ந்து சென்று, டெல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/23&oldid=1770519" இலிருந்து மீள்விக்கப்பட்டது