பக்கம்:நமது முழக்கம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நமது முழக்கம்



வரையிலும் பாயும் என்றால் நம்ப முடியுமா? நல்ல வில் வீரன் உண்மை என்று ஒத்துக் கொள்வானா? இதை ஒத்துக்கொண்டால் இதை புதிய வைதிகம் என்று தான் சொல்லவேண்டும்.

பிரிவினை வேண்டும்

ஆகையால்தான் பிரிவினை வேண்டும் என்கிறோம். திராவிட நாடு திராவிடர்க்கே வேண்டும். இந்தியாவிலிருந்து பிரித்து தரவேண்டும். காட்டை வெட்டி, வேலியிட்டு மரங்களைச் சாய்க்க வேண்டும் என்கிறோம். புலி கண்டிப்பாய் பதுங்கி பாய முடியாது.

நாட்டுப் பிரிவினையால் பொதுவுடமை இருக்கிறது. லெனினையும், மார்க்ஸையும் நன்றாக மீண்டும் படித்துப் பார்க்கட்டும்.

ஸ்காண்டிநேவியா என்ற நாடு பிரிந்து, நார்வே, ஸ்வீடன் என்று இரு நாடுகளாக இல்லையா? ஏன்? ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா? அங்கே மார்க்ஸ் புத்தகம் இல்லாமலா இருக்கும்? லெனின் படம் அங்கு இருக்காதா?

மார்க்ஸ் தத்துவத்தை—லெனினிஸத்தை படித்தவர்கள்—படித்தும் மறந்து விடாமல் இருக்கிறவர்கள் விரைவில் தெளிவு பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் கடந்த காலங்களில் பல தடவைகள் குழம்பிவிட்டாலும், முடிவில் தங்களைத் திருத்திக் கொள்ள தயங்காதவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/24&oldid=1770520" இலிருந்து மீள்விக்கப்பட்டது