பக்கம்:நமது முழக்கம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நமது முழக்கம்



குறைகளைப் போக்கிக் கொள்ள, உரிமைகளைப் பெற இந்த மே தினத்தைப் பரணி பாடும் நாளாக்கினார் அப்புரட்சி வீரர்! அவருடைய அரிய முயற்சியினால் ரஷ்யாவிலே, மே தின விழா, ஜார் ஆட்சியை ஒழிக்கும் மாபெரும் புரட்சிக்குப் பயிற்சிகளாக அமையலாயிற்று.

கொடுமைகளைக் கண்டு அஞ்சா நெஞ்சமும், பயங்கர அடக்குமுறை கண்டும் பணிய மறுக்கும் உரமும், வாட்டி வதைக்கும் எதேச்சாதிகாரத்தின் முன்பு வளையாத போக்கும்பெற, மே விழாவைப் பாசறை பள்ளியாக்கிக் கொண்டனர், ரஷ்யப் பாட்டாளி மக்கள்!

மற்றக் கட்சிக்காரர்கள் மே தினம் கொண்டாடினால், பொருளாதாரக் காரணங்களை மட்டுமே பெரிதும் வலியுறுத்திக் காட்டுவர். அவர்கள் மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம், பொருளாதார யந்திரக் கோளாறு என்று கருதுகிறார்கள், யந்திரக் கோளாறு, நிச்சயமாகவே மக்களின் வாட்டத்துக்கு காரணந்தான்; அந்த யந்திரம் தகர்த்தெறியப்பட்டு, மக்களின் வாழ்வை மிருக நிலைக்கு கொண்டு போகாத புதிய யந்திரம் செய்யப்பட வேண்டியதும் மிக அவசியந்தான். இதைத் திராவிடர் கழகம் என்றுமே மறுத்ததில்லை. ஆனால், ஏன் இத்தகையசுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்பது? எப்படி? யாரால்? மக்கள் ஏன் இதனை அனுமதித்தனர்? ஏன் இன்றும் சகித்துக் கொண்டிருக்கின்றனர்? என்ன கூறி, கஷ்டப்படும் மக்களைச் சுரண்டுபவர்கள், மயக்கியும் அடக்கியும் வைக்க முடிகிறது? என்பன போன்றவைகளைத் திராவிடர் கழகம், மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/28&oldid=1770527" இலிருந்து மீள்விக்கப்பட்டது