அண்ணாதுரை
29
மன்றத்துக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. மற்றக்கட்சிகள், இவைகளை எடுத்துக் காட்டுவதில்லை—அச்சம் காரணமாகவோ, அலட்சியத்தின் காரணமாகவோ, அல்லது அவகாசம் இல்லாததாலோ, எக்காரணங்களைப் பற்றி மற்றவர்கள் இந்த விஷயங்களைக் கூறமலிருப்பினும் நாம் இவை மக்களால் சிந்திக்கப்பட்டு, அந்த சிந்தனையின் பலனாக அறிவுத் துறையிலே ஒரு பலமான புரட்சி ஏற்பட்டாலொழிய, பொருளாதாரப் புரட்சியினால் மட்டும் புது வாழ்வு கிடைத்து விடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவே தான், நாம் மனிதன் அடிமைப்பட்ட காரணத்தையும், அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்பட வேண்டும் என்பதையும், நமது பிரச்சாரத்திலே முக்கிய பகுதியாக வைத்துக் கொண்டிருக்கிறோம். மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியமென்பதை யுணர்ந்து, ஐரோப்பாக் கண்டத்திலே, பேரறிஞர்களான வால்டேர், ரூசோ போன்றார், அறிவுத் துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணியாற்றினரோ, அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம்.
பூர்ஷுவா (முதலாளித்துவம்) என்ற தத்துவத்தை விளக்குகின்ற யாரும், அது சுரண்டும் முறை, பிறனுடைய உழைப்பால் வாழும் முறை என்று கூறுவர். நாம் ஆரியம் என்று கூறுவது, இதே நிலையைத்தான் சுரண்டும் முறை—தொழிலின் பேரால் அல்ல, மதத்தின் பேரால்—ஜாதியின் பேரால், பழமையின் பேரால்! புரோலோடேரியன், பாட்டாளி என்று பேசும்போது, நம் கண் முன் தோன்றும் உருவம், உழைத்து உருக்-