34
நமது முழக்கம்
சொக்கநாதர், அரங்கநாதர், மீனாட்சி, காமாட்சி, கோயில்கள் இன்னும் இருக்கின்றன. இவைகள் குறைந்தால் தான் நாடு முன்னேறும், நாட்டிலே நல்லறிவு ஏற்படத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடுகிறது. நம்முடைய கழகத்தின் அடிப்படைக் கொள்கை நாட்டிலே நல்லறிவைப் புகுத்துவது தான்.
கோழியோடு அதிகாலையில் விழித்தெழுந்து கோட்டானோடு தூங்குகிறான் நம் தொழிலாளி! ஓயாமல் உழைத்து உழைத்து அருமையான பொருள்களை உற்பத்தி செய்கிறான். ஆனால் அவன் வாழும் வாழ்க்கை எப்படி? சுருங்கச் சொன்னால் அவன் வாழ்வது மிருக வாழ்க்கை தான். நாகரிக நாட்டிலே, தன்னரசு தழைத்து ஓங்குவதாகச் சொல்லும் இந்த நாட்டிலே தொழிலாளி மிருக வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது. மிருகங்களுக்கு கிடைக்கும் ஓய்வு கூட ஏழைத் தொழிலாளிக்கு கிடைக்கவில்லை! உற்பத்தியைப் பெருக்கும் தொழிலாளி உயர முடிகிறதா?
சேலத்திலே 200-ம் நெம்பர் வேட்டியை நெய்கிற தொழிலாளி உடுத்துவதோ 30-ம் நெம்பர் மோட்டா வேட்டி. தொழிலாளி கட்டுகிறான் நான்கு அடுக்கு மாடிகள், அவன் வாழ்வதோ நாற்றமடிக்கும் ஓட்டைக் குடிசையில். அந்த ஓட்டைக் குடிசையிலே ஒன்பது பேர். மூவாயிரம் வகை நெல் நம்நாட்டிலே பயிராகிறது. ஆனால் பயிரிடும் விவசாயிக்கு உண்ணக் கிடைப்பது வரகோ, சோளமோ தான். உற்பத்தி பெருகினால் மட்டும் தொழிலாளிக்குப் போதுமா? தொழிலாளிக்கு முக்கியமாக வேண்டிய தென்ன? தேவைக்-