8
நமது முழக்கம்
ஆகிய இவர்களுக்கு இடையே ஏற்பட்ட போராட்டமே தவிர வேறில்லை. அது மக்கள் போராட்டமல்ல, என்ற பிரச்சாரம் கொஞ்ச நாளைக்கு முன் நடந்தது.
நாரதர் வேலை
தொழிலாளர் சம்பளம் அதிகம் வேண்டும் என்கின்றனர். முதலாளிகள் லாபம் அதிகம் வேண்டும் என்கின்றனர். இதில் மக்கள் ஏன் அக்கரை செலுத்த வேண்டும்.
முப்பது முதலாளிகள் இருப்பார்கள். அவர்களிடம் முப்பதாயிரம் தொழிலாளர்கள் போராடுவார்கள். அதைப்பற்றி 30 கோடி மக்களுக்கு என்ன வந்தது? அவர்கள் ஏன் இதில் அக்கரை செலுத்தவேண்டும் என்று பத்திரிகைகள் எழுதின. மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பிணைப்பில்லாமல் வேரறுக்கப் பார்க்கிறது இந்த வேலை செய்யும் பத்திரிகை. வெட்கமில்லாமல், தன் வேலையைக் குறிக்கும் ‘நாரதர்’ என்ற பெயரை வைத்திருக்கிறது.
இதைப் போன்றவைகளை ஒழித்து, மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நல்ல தொடர்பை ஏற்படுத்தவே திராவிட முன்னேற்றக் கழகம் வேலை செய்கிறது.
நமது நோக்கம்
தொழிற் சங்கங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடையாது. தொழிற் சங்கங்களை யார் நடத்தினாலும் சரி,