பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பார்வதிபாய் -5ఐGమి பதற்கில்லையே என்னும் துயரம் அவருக்கு மிக்கிருந்தது. அதல்ை அவர் எவர்கண்ணிலும் படாமல் கள்ளிரவிலே தம் ஊருக்குச் சென்று தம் ஆன்னேயாரைப் பார்த்து மீள்வார். இவ்விதம் பல ஆண்டுகள் கடந்தபின்னரே கம், பெரியார் தம் ஊருக்கு உரிமையோடு செல்லலாயினர். யார் எவ்விதம் இருப்பி னும் கார்வேபெரியாரும் ஆனந்திபாய்அம்மையாரும் இத் திருமணத்தால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்தம் குடும்பவாழ்க்கை இன்பமாகவே நடைபெற்றுவந்தது. மணம் நிகழ்ந்த ஒன்றரைஆண்டுக்குள் அவர்கட்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. பின்னரும் சில குழந்தைகள் பிறந்தன. கம் ஆனந்திபாய் தம் திருமணத்திற்குப் பின் கல்வியிலே பெரிதும் கருத்தைச் செலுத்தினர் என்று சொல்லுதற் கில்லை. ஆயின், தம் கணவனர் புரியும் பொதுநலத் தொண்டுகள் பலவற்றினுக்கும் தம்மால் இயன்ற உதவிகள் பலவும் புரிந்துவந்தார். பார்வதிபாய் புனு நகருக்குச் செல்லுதல் ஆனந்திபாய்க்குத் தம் வாழ்க்கை ஒழுங்குபட்டவுடனே, அவருக்கு, தங்கையாராய பார்வதிபாயைக் குறித்த எண்ணமே பெரிதாக இருந்தது. அவ் வம்மையாரும் தம்மைப்போல் மணம் புரிந்துகொள்ளுதல் வேண்டும் என்பது ஆனந்திபாயின் கருத்தன்று. தம் தங்கையார் எவ்விதமாயினும் முன்னேற்றமுறல்வேண்டும் என்பதே அவர்தம் பேரவா. தம் தங்கையார் தம்முடன் சிலநாள் இருந்தால் கல்வியில் முன்னேற இயலும்