பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய 12 அறக்கட்டளைக்கு என்று 1-3-1972-க்குப் பிறகு நிலங்களைப் புதியதாக வாங்கக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்டதும் முன்னேற்றக் கழக ஆட்சியில் தான். ஒளி வழங்கல் ஆணை இருள் அடைந்து கிடந்த தமிழகத்திலுள்ள பல்வேறு கிராமங்கள் 1973-ஆம் ஆண்டுக்குள் மின்னொளி பெற்றாக வேண்டுமென்கிற சபதத்தை எடுத்துக்கொண்டு மின் வாரியத்துறை அமைச்சர் அவர்களுடைய ஒத்துழைப் போடும். மின் வாரியத் துறை அலுவலர்களின் உறுதுணையோடும், மின்வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடைய உறுதுணையோடும் இன்றைக்கு வேக வேகமாக எல்லாக் கிராமங்களுக்கும் மின் ஒளி வழங்குகிற திட்டத்தை நிறைவேற்றி வருவது முன்னேற்றக் கழக அரசுதான். தமிழகத்தில் உள்ள மொத்தக் கிரா மங்கள், குக்கிராமங்கள் 81,393 ஆகும். அதில் 1933-ஆம் ஆண்டு முதல், அதாவது மின்சாரம் முதன் முதலாகத் தமிழகத்தில் நுழைந்த ஆண்டில் இருந்து 1967 வரை மொத்தமுள்ள 61,393 கிராமங்களில் மின்னொளி வழங் கப்பட்டிருந்த கிராமங்கள் 20,250 gm GÔT. 1973க்குள் தமிழகத்திலுள்ள எல்லாக் கிராமங்களுக்கும் மின்னொளி வழங்கப்படும் என்கிற மின்னொளித் தீவிரத்திட்டத்தை இந்த அவையில் நான் அறிவித்த பிறகு இந்த ஐந்தாண்டுக் காலத்தில் மட்டும் மின்னொளி பெற்றுள்ள கிராமங்கள் 38,474 ஆகும். 1933-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண் 5 மின் ஒளிவன் திராமம் 58.724 73F71 மீத முள்ள கிராமம் 1000 வரை- 34 ஆண்டுக் காலத்தில் தமிழகத்தில் மின்னொளி வழங்கப்பட்டிருந்த கிராமங்கள் 20,250 தான். ஆனால் கடந்த ஐந்தாண்டுக்குள்ளாக முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்னொளி வழங்கப்பட்ட கிராமங்கள் மட்டும் 38,474 ஆகும். ஆக, தமிழகத்தில் மட்டும் 58,724 கிராமங்கள் மின்னொளி அளிக்கப்பட்டுவிட்டன. ஜிச்ச மிருப்பது மூவாயிரத்திற்கும் உட்பட்ட கிராமங்களே என்கிற நிலையை அடைந்திருக்கிறோம்.