பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 தீவிரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனத் துணிவோடு ஜூன் 3-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஜூன் 3-ஆம் தேதி துவங்கிய திட்டம் இதுவரை கண்ணொளி வழங்குகிற முகாம்களை 26 இடங் களில் நடத்தியிருக்கிறது. திரு. ஆர். பொன்னப்ப நாடார்: கண்ணொளி வழங்கு வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்காக எங்கள் ஜில்லாவில் நிதி வசூலிக்கப்பட்டது. எந்த முறையில் வசூலிக்கப்பட்டது என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியும். வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு, எத்தனை பேர்களுக்குச் சிகிச்சை அளித்தார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த நிதி சேர்ந்துவிடக் கூடாது என்றுதான் சொல்லு கிறோம். நடுவில் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: நல்ல வேளை. கண் ணொளி வழங்குவதிலே ஆட்சேபனையில்லையென்று சொன் னதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிதியைப்பற்றிச் சொல்லுகிறேன். இந்த 26 முகாம்களில் புற நோயாளி களாக (Outpatient) சிகிச்சை பெற்றவர்கள்- கண் ணுக்குச் சிகிச்சை பெற்றவர்கள்-1,22,555 பேர். கண்ணை அறுவை செய்துகொண்டு சிகிச்சை பெற்றுக் கண்ணாடி வழங்கப்பெற்றவர்கள் 19,697 பேர். என்னுடைய பிறந்த கண்ணாடி பெற்றவர்கள் 19,697 நாளை முன்னிட்டுக் கண்ணொளி வழங்க வேண்டுமென்று கேட்டு, யாரும் கட்டாயப்படுத்தப்பட்டு அல்ல, இன்றைக்கு, இதுவரையிலே, கிடைத்திருக்கிற நிதியினுடைய மொத்தத்