பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அரிசனங்களின் அரசு 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலே உள்ள அரிசன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, ஒதுக்கிய தொகை ரூ.31 கோடி 1972-ஆம் ஆண்டில் அரிசன மக்களுக்காக ஒதுக்கப் பட்ட, ஒதுக்கப்படுகிற தொகை ரூ. 84 கோடி) இந்த அரசு அரிசனங்களுக்காக என்ன செய்தது, அரிசன மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்றெல்லாம் கேள்விக்கணை களை மேடையிலேயிருந்து அரசியல்வாதிகள் எங்களை நோக்கி விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, நான் பின் தங்கிய ய சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்கின்ற காரணத்தால் அரிசன சமுதாயத்தை மறந்து விட்டேன் என்கின்ற பழியை மீது போடவேண்டுமென்று எண்ணிப் பின்தங்கிய சமுதாயத்திற்குத்தான் நான் பாடுபடுகிறேன் என்கின்ற குற்றத்தைச் சாட்டுவதற்காக அந்தப் பெரியவர்கள் சியல் ரீதியில் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். நண்பர் பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டபடி, இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நான் சம்பந்தியாகிவிட்ட காரணத்தினால், யாரும் அந்த அவநம்பிக்கை கொண்டிடத் தேவையில்லையென்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். என் அர அன்று ரூபாய் 31 கோடி 1967-ஆம் ஆண்டு, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை. இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை ரூ. 84 கோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 1967-ஆம் ஆண்டிலே ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1 கோடி. 1972-ஆ ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.44 கோடி. இதுவரையிலே இல்லாத அளவுக்குத் - தமிழ் நாட்டினுடைய வரலாற்றிலே இல்லாத அளவுக்கு-அந்த இலாகா தனியாக அமைக்கப்பட்டு, பிற்பட்டவருக்காக ஒரு தனி அமைச்ச ருடைய நேரடிப் பார்வையில் அந்த இலாகா இயங்கி வரு கிறது. அண்மையிலேகூட, நானும் அந்தத் துறையினுடைய அமைச்சர் ராஜாராமும் சேலத்துக்குச் சென்று, பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் புதியதாக இணைந்து இருக்கிற அகரவெள்ளாஞ் செட்டியார் சமுதாயத்தினுடைய பாராட்டு தலைப் பெற்றோம். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அமைக்கப்பட்ட பின்தங்கியோர் நலக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வகுப்பினர் ஏறத்தாழ 15 அல்லது 16. அர்ச்சகரை வேளாளர், கம்பர், கல்வேலி கவுண்டர், கன்னார், கன்னட சைனீகர், குர்சிடி கார், ஒவச்சர், பாணர், வெள்ளான் செட்டியார். வேடர் ஆஸ்தாந்திரகோலா, செட்டி, சக்கரவார், பணி செய்வார், சவனக்காரர் ஆகிய 15 வகுப்பினர் இன்றைக்குப் பின்தங்கி யோர் பட்டியலிவே புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். 1967-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இருந்த விடுதிகள் 11. இந்த 5 ஆண்டுக் காலத்திலே, பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்காகக் கட்டப்பட்ட விடுதிகள் 109, 110-3