பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ 21 குடிசை மாற்று மன்னர்கள் வாரியம் தை குடிசை மா ற்று வாரியப் பணிகளை மற்ற மாநில அரசைச் சேர்ந்தவர்கள் வந்து பார்த்துத் தங்கள் மாநிலத்திலே உருவாக்க வேண்டுமென்ற அளவுக்கு வழிகாட்டியாக அமைந் திருக்கிறது. இன்று நான் வருகிற வழியிலே அயோத்தியா குப்பத்தைப் பார்த்தேன். பீச் ரோட்டிலே குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டு அந்த மக்கள் எல்லாம் தங்களுக்காகக் கட்டப்பட்ட கூடகோபுரங்களிலே இருப்பது - ஏதோ சேர பாண்டிய எல்லாம் இருந்த தாகச் சொல்கிறார்களே- அவர்கள் மீண்டும் வந்து ராஜ உடை அணிந்து கொண்டு கூடகோபுரங்களிலே உள்ள உப்பரிகையிலே வந்து பார்த்தால் அதைப் பார்க்கிற நேரத்திலே ஏற்படுகிற மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி - குடிசையிலே அன்றைக்கு வாழ்ந்த மக்கள் இன்றைக்கு, கூட கோபுரத்திலே இருப்பதைப் பார்க்கிற நேரத்திலே நமக்கு ஏற்படுகிறது. நொச்சிக் குப்பத்தைப் பாருங்கள், அயோத்தியா குப்பத்தைப் பாருங்கள், கோட்டூர்புரத்திலே, வியாசர்பாடியிலே ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்டிருக் கின்ற எழில் மாளிகைகளைக் காணுங்கள். இதற்காக ஆண்டுக்கான திட்டமொன்றை உருவாக்கி அதனை வேற்றிட, திரு இராம. அரங்கண்ணல் அவர்கள் தலைமையில் குடிசைமாற்று வாரியம் உருவாக்கப்பட்டு 63 திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அளவில்- அந்தத் திட்டத் தின் கீழ் 23,232 குடியிருப்புகள் கட்டப்பட வேண்டுமென்ற முறையில் -- அவற்றில் 4,590 கட்டி முடிக்கப்பட்டவை; வேலை நடந்துகொண்டு இருப்பவை, பாதியளவுக்கு நடந்துகொண் டிருப்பவை 7,997; ஆரம்ப வேலை தொடங்கப்பட்டு இருப்பவை 10,745. இந்தத் திட்டத்தைத் திரு ஜெயப் பிரகாச தாராயணன் பாராட்டியிருக்கிறார். 7 நிறை இந்தத் பல் திட்டத்தை எல்லைப்புற காந்தி பாராட்டியிருக்கிறார். வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வருகின்ற தூதுவர்கள் பாராட்டியிருக் கிறார்கள், நல்லவர்கள் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். திரு ஆர். பொன்னப்ப நாடார்: திருமதி இந்திரா காந்தி அம்மையார் அந்தத் திறப்பு விழாவிற்கு வர மறுத்து விட்டதாகச் செய்தி சொல்லுகிறார்களே, அது உண்மையா? மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: மறுத்துவிட வில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளிருந்து காரணத்தினால் வர இயலவில்லை. நல்லது சொல்லும்பொழுது இதுதான் கண்ணிலே படும். ஏதாவது இப்படிப் பட்ட விஷயங்களைக் கேட்சு வேண்டுமென்று தான் தோன்றுகிறது. அந்த ஒட்டுக் குடிசைகளில் வாழ்கின்ற மக்கள் அத்தனை பேரையும் நான் இந்திரா காந்தியாகப் பார்க்கிறேன். அந்த ஓட்டுக்