பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நீர்த் தகராறு போன்ற பிரச்சினைகளில், எதிர்க் கட்சித் தலைவர்களையும் கலந்து கொண்டு முடிவு எடுக்கின்ற ஜனநாயகப் பண்பினை நாம் காத்து வருகிறோம். ஆகவே சர்வாதிகாரம் நடைபெற்றுவிடவில்லை. அடக்குமுறை . நடை திரு பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்னார்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். ஹாண்டே அவர்கள் சொன்னார்கள். இங்கு போலீஸ் ராஜ்யம் பெறுகிறது; அடக்குமுறை நடைபெறுகிறது; சுட்டுத் தள்ளுகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். துப்பாக்கிப் பிரயோகத்தை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்று பொருள் அல்ல. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சில ... துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றுவிடுகின்றன. சிலர் உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. அதற்காக வருந்துகிறோம். அனுதாபம் தெரிவிக்கிறோம். அந்தக் குடும்பங்களுக்கு நிதி வழங்குகிறோம். அதனால் அந்தக் குடும்பங்கள் முழு ஆறுதல் பெற்றுவிட முடியாது. அது எங்களுக்குத் தெரியா மல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறுகிற துப்பாக்கிப் பிரயோகத்தை வைத்துக் கொண்டு உடனடியாக இந்த அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிற நேரத்தில்--ஒரு நான்காண்டுக்கால அகிலஇந்தியக் கணக்கைப் பார்க்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் 169, '70, '71, '72 இந்த நான்காண்டுகளில் நடைபெற்ற கலகம் 183; செத்தவர்கள் 53 பேர்கள் ; காயம் பட்டவர் கள் 257 பேர், மராட்டியத்தில் நான்காண்டுக் காலத்தில் நடைபெற்ற கலகம் 394 : இறந்தவர்கள் 129; காயம் அடைந்தவர்கள் 426, - துப்பாக்கிச்சூட்டினால் ! கேரளாவில் 21 ; இறந்தவர்கள் 14; காயம் பட்டவர்கள் 165. மேற்கு வங்கத்தில் கலகம் 1011: இறந்தவர்கள் 335 : காயம் பட்டவர்கள் 511. ஆந்திராவில் கலகம் 310 : இறந்தவர்கள் 213 : காயம் பட்டவர்கள் 223. தமிழ்நாட்டில் சுலகம் 23; இறந்தவர்கள் 30: காயம் பட்டவர்கள் 203. இந்தப் புள்ளிவிவரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 30 பேர்கள் தான் இறந்தவர்கள் என்று சொல்வதால் 30 பேர்களைச் சுட்டது சரிதான் என்று வாதிப்பவர்கள் அல்ல நாங்கள். 30 பேர் களில் 17 பேர்கள் விவசாயப் போராட்டத்தில் இறந்த நேரத்தில் தமிழ் நாட்டில் இதுவரையில் யாருக்கும் கொடுக்காத அளவுக்கு ரூ.5,000 அந்தக் குடும்பங்களுக்கு வழங்கினோம். ரூ.5,000 உயிரின் விலை அல்ல. இழந்துவிட்ட குடும்பங்களுக்கு கலகம் ஆனால் டாக்டர் எச்.வி. ஹாண்டே : முதல் அமைச்சர் அவர்களின் ஸ்டேட்மென்டில் கலகங்கள் 23 என்று சொல்லியிருக்கிறார்