பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 காலத்திற்கும் உகந்தது அல்ல. மாணவர்கள், வே எடுத்ததற் கெல்லாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். வன்முறை களில் ஈடுபடுவோம் என்று சொன்னால் அதை யாரும் வர வற்க மாட்டார்கள், திரு.ஹாண்டே அவர்களும் அதைத் தான் வலியுறுத்திப் பேசினார்கள். திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் அதை வரவேற்கத் தயங்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த அவையின் சார்பாக மாணவர்களைக் கேட்டுக் கொள்வேன். அவர்களுடைய எதிர் காலத்தை மறந்து விடக்கூடாது! ஒளிமயமான எதிர்காலத்தை இந்த இளமைத் துடிப்பின் குறும்புகளால், இப்படிப்பட்ட கிளர்ச்சி யால், அவர்கள் கெடுத்துக் கொள்வது நல்லது என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன். குற்றச்சாட்டுகள் திரு- அல்ல குற்றச்சாட்டுகளைப்பற்றி எல்லாம் இங்கே எடுத்துப் பேசப்பட்டன. நம்பிக்கை இல்லை இந்த அரசின் மீது, ராஜினாமாச் செய்ய வேண்டும் இந்த அரசு என்று பேசிய பொன்னப்ப நாடார் அவர்களும், ஜேம்ஸ் அவர் களும், டாக்டர் ஹாண்டே அவர்களும் குற்றச்சாட்டுக் களையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஒரு வகையில் எங்களுக்கு நிம்மதி. பிரதமரிடத்திலிருந்து நாங்கள் அனுமதி பெறுவதற்கு முன்பே மாமப் பேழையில் முக்கால் பகுதி திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், டெல்லி வரை குற்றச்சாட்டுகளைக் கொண்டு போனவர்கள் நல்ல சாமர்த்தியசாலிகள். அவர்கள் தாங்கள் வந்து ங்கே ஆழம் பார்ப்பானேன் என்று பொன்னப்ப நாடார் அவர் களையும், ஜேம்ஸ் அவர்களையும் விட்டு ஆழம் பார்த்து விட்டார்கள் (டாக்டர் ஹாண்டே எழுந்திருந்தார்) நீங்கள் 2). அவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் அந்தக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். சட்டசபையில் பேசு மாட்டார்களாம். பொது மக்களிடத்தில் சொல்ல மாட்டார் களாம். சட்ட மன்றத்தில் பேசுங்கள், நல்ல பாதுகாப்பு உண்டு. சட்ட மன்றத்தில் எதையும் பேசலாம். அந்தப் பாதுகாப்பு இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது. பதில் சொல் கிற கடமை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், இங்கே பேச வருவதில்லை. பொது மக்களிடத்திலே பேசுங்கள், பத்திரி கைகளிலே வரட்டும். நீங்கள் எதிர்பார்க்கின்ற நீதி விசாரணை, உயர்நீதி மன்றத்தில் நாம் நட த்திக் கொள்ள லாம் என்று சொல்கிறோம். பேராசிரியர் அன்பழகன் நேற்றோ அதற்கு முன்தினமோ குறிப்பிட்டார்கள். அவதூறு கூறுகிறவர்கள் தப்பித்துக் கொள்வது, குற்றம் சாட்டப் பட்டவர்கள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுவது என்பது சரியான நியாயமாகாது என்று குறிப்பிட்டார்கள். அவதூறு கூறுபவர்களுக்கு என்ன தண்டனை? ஆகவே தான் நீதி மன்றத்தில் சந்திப்போம். தைரியம் இருந்தால்.