பக்கம்:நம்மாழ்வார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வார்

11

வில்லை. ஞான ஸ்வரூபியான மாறனார் அக் காற்று தம்மை அணுகாதபடி அதைக் கடிந்து ஓட்டி விட்டார். அதனால் அவருக்குப் பசி, தாகம் முதலியன உண்டாகவில்லை; மாறன் அழாமலும் அரற்றாமலும் மௌனம்பூண்டிருந்தார். இப்படிச் சடவாயுவை அவர் அவமானப்படுத்திக் கோபித்தபடியால் அவர்க்குச் சடகோபரென்று ஒரு புதிய பெயர் உண்டாயிற்று.

பரமபத நாதன் திருவருளால் அவதரித்த மாறனார் பதினாறுவருஷங்கள் இவ்விதம் கண்விழியாமல் மௌனமாய் வளர்ந்து வந்தார். அவர், தமக்கு ஆகாரம் வேண்டுமே யென்று கவலைப் பட்டவரேயல்லர். அவருக்கு வேறு ஏதேனுங் குறைகள் ஏற்பட்ட துண்டோ? ஒன்றுமில்லை. அவரது மனம் உலகத்திலுள்ள பொருள்களுள் எதனிடத்தேனும் சென்ற தோ? இல்லை. பொருள்கள் யாவும் தோன்றுவன போல் தோன்றிச் சிலநாளிருந்து பின் அழியுந்தன்மை யுடையனவாம். அற்பர்க்குத்தாம் இவற்றில் ஆசை மிகுதியாய்த் தோன்றும். மாறனார் ஒரு பெரிய ஞானி; ஆகையால் அவருக்கு ஒன்றிலும் பற்றில்லை. இன் பம் துன்பம் இரண்டும் அவருக்குச் சமமே. அவரு டைய இருப்பைக் கண்டு பகைத்தனர். பலர் கையில் அவரைப் பித்தம் பிடித்தவகைய ம் ஊமையென்றும் பழித்தார்கள். அம் மொழிகளை அவர் காதுகொடுத் துக் கேட்டிலர். அவருடைய பெற்றோர் அவர் நிலையைக் கண்டு மிகவும் வருத்தமுற்றனர். "ஐயோ! நாம் என்ன பாவஞ் செய்தோமோ?கடவுள் இவ்வாறு நம்மைத் தண்டிக்கிறார்" என்று அவருடைய பெருமை யைச் சிறிதும் அறியாமல் துக்கித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்மாழ்வார்.pdf/10&oldid=1515501" இலிருந்து மீள்விக்கப்பட்டது