பக்கம்:நம் நேரு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நம் நேரு


வீரசரிதை ஆகும். மக்கள் மதிக்கும் மாண்புறு தலைவராய், நாட்டின் வீரநாயகனாய், நேரு வளர்ந்துள்ளது மாயவித்தைகளினால் அல்ல: வாசாமகோசரமான பேச்சுக்களினால் அல்ல; ஆடம்பர விளம்பரங்களினால் அல்ல-குன்றாத நாட்டுப் பற்றினால், தளராத போராட்டத்தினால், ஓயாத சிந்தனையினால், உணர்வு கொளுத்தும் ஊக்கத்தினால், அற்புதமான ஆற்றலினால், போற்றத்தக்க திறமைகளினால் தான் என்பதை நேருவின் வரலாறு எடுத்துச் சொல்லும்.

அத்தியாயம் 2.

காஷ்மீர்-இந்தியாவின் நந்தவனம். எழில்அரசி கொலுவிருக்கும் இன்பப்பூங்கா. இயற்கை அற்புத வர்ணங்களால் தன்னையே அலங்கரித்துக்கொண்டு மகிழும் அழகுநிலம். அதுதான் நேரு குடும்பத்தினரின் தாயகம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பதினெட்டாம் நூற்றாண்டின், ஆரம்பத்தில், காஷ்மீர பிராமணர்கள் சிலர் அழகு தவழும் மலைகளிலிருந்து இறங்கி வந்தார்கள். பசுமையும் வளமும் பரந்து கிடந்த சமநிலங்களிலே செல்வமும் புகழும் சேகரிக்கம் நோக்குடன் முன்னேறினார்கள். மேகாலய சாம்ராஜ்யம் அஸ்தமித்துக் கொண்டிருந்த காலம் அது. மன்னர் மன்னன் அவுரங்க சீபுக்குப் பிறகு பரூஸியார் என்பவன் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்தான். அப்போது தான் காஷ்மீரிகள் டில்லி நோக்கி வந்தார்கள்.

சமஸ்கிருதத்திலும் பெர்ஸிய மொழியிலும் சிறந்த கல்விமானக விளங்கிய ராஜ்கால் எனும் காஷ்மீரி முன்னரே பாக்ஸியாசின் கவனத்தைக் கவர்ந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/11&oldid=1376972" இலிருந்து மீள்விக்கப்பட்டது