பக்கம்:நம் நேரு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நம் நேரு


யாவின் அரும்பெரும் கவிஞராகிய ரவீந்திரநாத் தாகூரும் அவதரித்தார் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம்தான்.

மோதிலால் நேரு பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே அவரது தந்தையார் காலமாகிவிட்டாராம். அத்னால் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு மோதிலாலின் பெரிய சகோதரர்கள் மீது படிந்தது. ஜவஹர்லாலின் ‘பெரிய பெரியப்பா] வனஸ்தர நேரு பிரிட்டிஷ் சர்க்காரின் நீதி இலாக்காவில் உத்தியோகம் ஏற்று, அடிக்கடி இடமாற்றங்கள் பெற்று வாழ்ந்து விட்டார். ஆகவே மோதிலால் தனது இரண்டாவது அண்ணா ஆகிய நந்தலால் நேருவின் கண்காணிப்பிலேயே வளரநேர்ந்தது.

இதனால் நேரு இந்திய சமாஸ்தான நிர்வாகப் பொறுப்பில் நல்ல பங்கு பெற்றுத் திகழ்ந்தவர் ராஜபுதனத்தில் உள்ள கெத்ரி சமஸ்தானத்தின் தின்வானாக அவர் பத்து வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு சட்டக்கல்வி பயின்றூ ஆக்ராவிலேயே வசித்து வக்கீல் தொழில் பார்த்து வந்தார். அவரே மோதிலாலுக்கு அண்ணனாய், தந்தையார், வாழ்வின் வழிகாட்டியாய் விளங்கினார்.

புதிதாக நிறுவப்பெற்ற ஹைக்கோர்ட்டுடன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார் நந்தலால். ஆக்ராலிருந்த ஹைக்கோர்ட் அலகாபாத்துக்கு மாற்றப்படவும் நேருவின் குடும்பத்தினரும் ஊர் மாற்றம் பெற்றனர். அலகாபாத்தையே ‘எங்கள் ஊர்’ என்று சொல்லும் வண்ணம் அங்கேயே நிலைத்துவிட்டனர்.

நந்தலால்நேரு உயர்தர நீதிமன்றத்தின் ’பெரிய வக்கீல்’ ஆகப் புகழ்பெற்று விட்டார். தாயாரின் செல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/13&oldid=1362231" இலிருந்து மீள்விக்கப்பட்டது