பக்கம்:நம் நேரு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

16


குடும்பப் பொறுப்புகளை ஏற்று நிர்வகித்து நல்ல பொருளாதார பலமாகத் திகழ்ந்த பெரியவர் போய்விட்ட நஷ்டம்-இரண்டும் ஒன்று கூடிக் கொண்டன. பெரிய குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பாரம் மோதிலாலுக்கு வந்து சேர்ந்தது.

ஆகையினுல் மோதிலால் தீவிரமாகத் தொழிலில் முனைந்தார். ஆர்வத்தோடு உழைத்தார். நல்ல வெற்றி பெற்றார். அவர் ஆசைப்பட்ட தொழில் வெற்றி அவருக்குக் கிட்டியது. அது பொருளாதார வெற்றியைக் கொண்டு சேர்த்தது.

1889-ம் வருஷம் நவம்பர் மாதம் 14-ம் தேதி அன்று அலகாபாத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தார்.

வக்கீல் தொழிலில் சீறும் சிறப்பும் பெற்றுச் செல்வம் திரட்டுவதிலேயே கண்ணாகயிருந்தார் மோதிலால். அப்போதெல்லாம் அவர் பொதுப் பணி எதிலும் ஈடுபடத் துணியவில்லை. அந்த நாட்களில் தேசீய காங்கிரஸ் சபை என்பது ஆங்கிலேயருக்கு இசைந்த ஒரு ஸ்தாபனமாக உருவாகி வந்தது. அதன் ஒன்றிரு நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்றாராயினும், அச் சபையில் சேர்ந்து தொண்டாற்றும் எண்ணம் அவருக்கு எழவில்லை. மற்றவர்களுக்குப் பின்பாட்டுப்பாடும் மனோபாவம் அவருக்கு என்றுமே எழுந்ததில்லை. ஆளும் ஆசையும் அதிகாரப் பண்பும் அவரோடு உடன்பிறந்த இயல்புகள். சட்டப் பயிற்சியே அவரது கவனத்தையும் காலத்தையும் ஈர்த்துக் கொண்ட ஆசை நாயகியாக விளங்கிய காரணத்தினால் அவருக்கு வேறு எத்துறையிலும் நாட்டம் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/16&oldid=1362242" இலிருந்து மீள்விக்கப்பட்டது