பக்கம்:நம் நேரு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நம் நேரு

தில்லை என்றே கூற வேண்டும். அவருடைய தொழில் மூலம் கிட்டிய வெற்றியும் மதிப்பும் அவருக்குத் தனியானதொரு கெளரவமும் தன்னம்பிக்கையும் கொடுத்தன.


இயல்பாகவே போர்த்தினவு பெற்ற அவர் எதையும் எதிர்த்துப் போராடி முன்னேறவே விரும்புபவார். எனினும் ஆதி நாட்களில் அவர் அரசியல் களத்திலிருந்து விலகி நின்றது அதிசயமாகத்தான் தோன்றுகிறது. அக் காலத்திய காங்கிரஸ் நடவடிக்கைகளிலோ அரசியலிலோ போராடுவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை என்பதும் உண்மைதான். எனினும் தமக்குப் பிடித்த தொழிலில் ஈடுபட்டு வெற்றி ஏணியில் படிப்படியாக, உறுதியாக காலூன்றி உயர்ந்து கொண்டிருந்தவர் முற்றிலும் புதிய துறை ஒன்றில் குதிக்கத் தயாராக இல்லே'. பிறரது தயவினாலோ பிறருக்குத் தொண்டு பரிந்தோ நாம் உயரவில்லை; தமது மன உறுதியும் அறிவின் பலமுமே தமக்குத் துணை என்ற உணர்வு அவரது செயல்களில் பிரதிபலித்தது. இவ்விதம் தமது தந்தையின் பண்பு பற்றிக் குறித்திருக்கிறார் ஜவஹர்லால்.

மோதிலால் நேருவுக்கு ஆங்கிலேயரின் வாழ்க்கை முறைகளால் ஏற்பட்டிருந்து மோகம் மாறாமல் இருந்தது. செல்வம் பெருகப் பெருக அது வளர்ந்து வந்தது. தனது நாட்டினர், தாழ்ந்து, தாழ்ந்து தாழ்ந்தே போயினர். அவர்களின் இழிநிலை அவர்களது தகுதி பெற்றெடுத்த பரிசே ஆகும்; நாட்டுப்பணியின் பெயரால் - அரசியலில் புகுந்தவர்கள் பலரும் வேறு துறைகளில் முயன்று வெற்றி காண முடியாது தோல்வியுற்றவர்களே ஆவர்; செயல் புரியும் ஆற்றல் பெற்றிராத அவர்கள் அனைவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/17&oldid=1362844" இலிருந்து மீள்விக்கப்பட்டது