பக்கம்:நம் நேரு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நம் நேரு

அனுப்ப வில்லே. வீட்டில் வைத்துக் கல்வி கற்கச் சிலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதனால் சிறு வயதில் பள்ளித் தோழர்கள் சேரவும் எனக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை" என்று நேரு எழுதியிருக்கிறார்.


வயதுக்கு ஏற்ற தோழர்கள் இல்லையெனினும் அக்குடும்பத்தில் பையன்களுக்கும் உறவினர்களுக்கும் குறைவில்லை தான். சேர்த்து விளையாட வாய்ப்புகள் இல்லை எனினும் பெரியவர்கள் போல் வாய்வீச்சு வீசிக் களித்த இளைஞர்களின் பேச்சுக்களை எல்லாம் புரிந்தோ புரியாமலோ கேட்டுக் கொண்டிருக்க நேருவுக்கு வாய்ப்பு நிறைய இருந்தது.


ஆங்கிலேயரின் ஆணவம் பற்றியும், இந்தியரைப் பிறநாட்டவர் இழிவாகக் கருதி வருவது குறித்தும் அவர்கள் காரசாரமாகப் பேசி விவாதிப்பார்களாம். அவமானம் எதிர்ப்படுகிற போது அதைச் சகித்துக் கொண்டிருப்பது தவறு. எதிர்த்ததுத் தாக்கிப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று கோஷிப்பார்கள். ஆளுவோருக்கும் அடிமைப் பட்டோருக்குமிடையே எழுகின்ற சமர்களைப் பற்றி ஆர்வமாக விவரித்து மகிழ்வார்கள் அவர்கள். ’நியாயம்’ என்று கூட ஆங்கிலேயர் பக்கமாகவே சதிராடி நின்றது என்பது சாத்திரப் பிரசித்தமான உண்மை. ஒரு இந்தியனை ஆங்கிலேயன் ஒருவன் கொன்று விட்டால் அந்த அந்நியன் தண்டனை எதுவும் பெறாமலே தப்பி விடுவது சாத்தியமாக இருந்தது அன்றைய இந்தியாவிலே. ஆனால், ஆங்கிலேயன் இருக்கின்ற ரயில் வண்டிப் பெட்டியினுள் இந்தியன் எட்டிப் பார்த்தால் கூட மூர்க்கத்தனமாகத்தாக்கப் பெறுவது சர்வசாதாரண நிகழ்ச்சியாக விளங்கியது. பொதுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/19&oldid=1362876" இலிருந்து மீள்விக்கப்பட்டது