பக்கம்:நம் நேரு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

நம் நேரு


மதசாஸ்திரங்கள், உபநிஷதங்கள். பகவத்கீதை. தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் பற்றி எல்லாம் கற்றுக் கொள்ள அவர்தான் உதவிபுரிந்தார். ஆகவே, நேருவின் உள்ளத்தைப் பண்படுத்திய பெருமையில் புரூக்ஸுக்கு முக்கியமான பங்கு உண்டு. ”எப். டி. புரூக்ஸுக்குக் கடமைபட்டவன் நான்” என்று நேருஜீயே சுயசரிதையில் பொறித்திருக்கிறார்.

போயர் புத்தம் நிகழ்ந்த காலத்திலும், ரஷ்ய, ஜப்பானிய யுத்தம் கிளர்ந்தெழுந்த போதும் அவற்றின் போக்கிலே நேரு அதிக கவனம் செலுத்தி வந்தாராம். எப்பொழுதுமே தினசரிப் பத்திரிகையை ஆவலுடன் எதிர்பார்த்து அயல் நாட்டுச் செய்திகளை ஆர்வமுடன் படித்து உலக அறிவை அகண்டதாக்கி வந்தார் அவர். ஜப்பானியர்கள் பெற்ற வெற்றிகள் அவருக்கு உணர்வூட்டின. ஜப்பானைப் பற்றிய புத்தகங்களே ஏகமாக வாங்கிக் குவித்து விட்டாராம். அவற்றில் சிலவற்றைப் படித்து ஜப்பான் நாட்டின் சரிதை, அங்நாட்டின் வாழ்க்கை நிலே, ஜப்பானின் பழங்கதைகள் முதலியவற்றில் அவர் ஆழ்ந்து விட்டாராம்.

தேசீய உணர்வு முளைவிட்டு எழுந்து படர்ந்து வளர்ந்தது அவர் உள்ளத்திலே, இந்தியாவின் விடுதலையைப் பற்றிக் கனவு கண்டார். ஐரோப்பாவின் பிடியிலிருந்து விடுபட்ட ஆசியாவின் சுதந்திரம் பற்றி எண்ணினார். கையிலே வாளேந்திக் களத்திலே குதித்து, பாரதத்தின் தளைகளே அறுத்தெறியத் தாம் அருஞ்சமர் புரிவதாகவும், வீரதீர பராக்கிரமங்கள் செய்வதாகவும் கனவுகள் காண ஆரம்பித்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/27&oldid=1364967" இலிருந்து மீள்விக்கப்பட்டது