பக்கம்:நம் நேரு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

25



பொதுவாகவே அவர் வாழ்க்கையில் அடிக்கடி கண்ட கனவுகளில் ஒன்று ஆகாயத்தில் பறந்து பறந்து மேலெழும் செயலைக் காட்டுவதாம். எக் கருவிகளின் துணையுமின்றித் தானகவே தான் மேலே கிளம்பி உயர உயரப் பறப்பதாகக் கனவுகள் தோன்றும். அவை மிகத் தெளிவாகவும். நிஜமாகவே அனுபவிப்பது போலவும் தோன்றும், கனவின் பொருள் உரைக்கக் கற்ற ஆய்வாளர்கள் இவற்றைப் பற்றி எப்படி விரித்துரைப்பார்களோ நான் அறியேன்” என்று நேரு குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வில் மிக உயர்ந்து விளங்க வேண்டும்; லட்சிய வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை வளர்த்த உள் மனத்தின் எண்ணப் பிரதிபலிப்புகளாக இருக்கலாம் அந்தக் கனவுகள். எதிர்காலத்தில் அவர் பெறவிருந்த வெற்றிகளே, உலகமே வியந்து போற்றும் விதத்தில் அவர் உயர்ந்து விடுவார் என்பதை, முன்னதாகவே அதீத உணர்வு எடுத்துக்காட்டி வந்திருக்கிறது; அதன் சூசகங்களே அக்கனவுகள் என்றும் கொள்ளலாம் அல்லவா?

அத்தியாயம் 3

1905-ம் வருஷம் மே மாதம்-ஜவஹர்லால்நேரு தனது தந்தை, தாய், சகோதரிகளுடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அப்பொழுது அவருக்குப் பதினைந்து வயது நிறைவுற்று விட்டது. அவரை ஹாரோ கலாசாலேயில் மாணவராகச் சேர்த்துவிட்டு, நேருவின் பெற்றோர் ஐரோப்பிய யாத்திரை சென்று விட்டர். பிறகு இந்தியா திரும்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/28&oldid=1376974" இலிருந்து மீள்விக்கப்பட்டது