பக்கம்:நம் நேரு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நம் நேரு


ஞானம் பெற்ற மேன்மக்களும் சேர்ந்து ஆடிய ஓர் நாடகமாக முடிந்தது. தென் ஆப்பிரிக்கா சென்று திரும்பியிருந்த கோகலே கவனிப்புக்குரிய தலைவராக விளங்கினார்.

ஜவஹர் லால் நேரு பங்கிப்பூர் காங்கிரஸில் ஓர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அவர் ஹைக்கோர்ட் வக்கீல் தொழிலை ஏற்றிருந்தார். ஏழு வருஷங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்ததும், ஆரம்பத்தில் அவருக்கு உற்சாகம் அதிகமாகத் தான் இருந்தது. நாளாக ஆகச் சுற்றுப் புறமும் விசேஷமற்ற வாழ்வும் சாரமில்லாதவை களாகவே தோன்றின.

காந்திஜீ அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியலைப் பொது ஜனத்தொடர்பு உடையதாக மாற்றியிராத காலம் அது. மெத்தப்படித்த மேதாவிகளின் பொழுது போக்காகவும், பட்டம் பதவிகளுக்கு அஸ்திவார மிடுவதாகவும் அரசியல் விளங்கி வந்தகாலம் அது. தேசியம் என்றால் ஆளவந்த அந்நியரை எதிர்த்துப் போராடி உரிமையைப் பெறுவது என்ற உணர்வு பெற்றிருந்த ஜவஹருக்கு அந்நாளையில் அரசியல் துறையில் இடம் இருந்ததாகத் தெரியவில்லை, அவரும் காங்கிரஸில் அங்கத்தினராகி, அவ்வப்போது கூடிக் கலையும் கூட்டங்களுக் கெல்லாம் போய் வந்துகொண்டுதான் இருந்தார். எப்போதாவது அயல்நாடுகளில் இந்தியர் படுகின்ற அவதிகளைக் குறித்த விவகாரங்கள் தலைதூக்கும் போது நேரு வெகு ஆர்வத்தோடு கலந்துகொள்வார். இத்தகைய சந்தர்ப்பங்கள் மிக அரியனதான்.

பொழுதுபோக்கி உல்லாசம் பெறுவதற்காக நேரு சிலசமயங்களில் வேட்டை ஆடச் செல்வது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/37&oldid=1366163" இலிருந்து மீள்விக்கப்பட்டது