பக்கம்:நம் நேரு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

35


காடுகளிலும் வெளிநிலங்களிலும் சுற்றுவதில்தான் அவர் அக்கறை காட்டினாரே தவிர, மிருகங்களைக் சுட்டுத் தள்ளுவதில் அவர் சிரத்தை கொண்டாரில்லை. ஆகவே அவருடைய வேட்டை விவகாரங்கள் பலவும் ரத்தம் சிந்தாத கீர்த்திப் பிரதாபங்களாகத் தான் அமைந்தன. ஆனாலும் ‘குருட்டாம் போக்கிலே’ ஒரே ஒரு தடவை மட்டும் அவர் காஷ்மீர் கரடி ஒன்றைச் சுட்டுக்கொன்று விட்டாராம். அவருக்கு இருந்த ‘கொஞ்ச நஞ்சம்’ வேட்டை ஆர்வத்துக்குக்கூட முடிவு கட்டிவிட்டது. அவர் உள்ளத்தைத் தொட்ட ஓர் நிகழ்ச்சி.

ஓர் சமயம் வேட்டையாடச் சென்ற அவர்காலடியில் வந்து விழுந்தது காயம்பட்ட மான் ஒன்று. மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த மானின் விழிகள் நேருவை நோக்கிப் பரிதாபமாக நிலைத்து நின்றன. கண்ணிர் தேங்கிய தடங்கண்கள் நேருவின் உள்ளத்தைக் கலங்கவைத்தன. பிறருக்குத் தீங்கு நினையா அப்பிராணியின் துயர முடிவு அவர் இதயத்தை உறுத்தியது; நெடுநாள் வரை நீங்கா நினைவாக அவர் கெஞ்சில் குறுகுறுத்தது. அப்புறம் அவர் வேட்டையாடத் துணியவே இல்லை.

அந்நாட்களில்தான் கோகலே ‘ஸெர்வன்ட்ஸ் ஆவ் இந்தியா சொஸைட்டி’யை நிறுவியிருந்தார். அதன் அங்கத்தினர்கள் சொல்ப ஊதியம் பெற்று சேவையையே பெரிதாக மதித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் பொதுப்பணி புரிந்து வந்ததை அறிந்து நேருவியந்தார், எனினும் அச் சபையில் சேர அவர் விரும்பவில்லை. அவர்களுடைய போக்கு மிகவும் மிதப்பண்புடையதாக இருந்தது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/38&oldid=1366168" இலிருந்து மீள்விக்கப்பட்டது